கருணாநிதிக்கு 93; பொது வாழ்வில் 80 ஆண்டு கர்ஜனை

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தன் 93வது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார். கட்சியின் தலைமையகமான சென்னை அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துக் களையும் பெற்றுக்கொண்டார். பிறந்தநாளை முன்னிட்டு தனது சிஐடி காலனி வீட்டில் கருணாநிதி மரக்கன்று நட்டார். குடும்பத்தினர், கட்சியினர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து கூறினர்.

அண்ணாதுரை நினைவிடத் தில் காலை 7:00 மணிக்கும் ஈவெரா பெரியார் நினைவிடத்தில் காலை, 7:15 மணிக்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய திமுக தலைவர், அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய பிரமுகர் கள், பொதுமக்களின் வாழ்த்துக் களைப் பெற்றார். மாலையில் ராயப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேச இருந்தார். திமுகவின் தலைவராக இருக் கும் கருணாநிதி கடந்த 80 ஆண்டுகாலமாக பொது வாழ்வில் இருந்து வருகிறார்.

“கடந்த 1950களில் இருந்து கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் இல்லை என்று சொல் லும் அளவுக்கு அவரின் பொது வாழ்க்கை உள்ளது” என்று வர லாற்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். திரு கருணாநிதி தனது பிறந்தநாளையொட்டி செய்தி ஒன்றை முன்னதாக வெளியிட்டார். “சட்டமன்றத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, செய்தித் தாட்கள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணிமண்ட பத்தைத் தாங்கிக்கொண்டிருக் கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். படம்: ஊடகம்

23 Aug 2019

26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் சிதம்பரம்

ஒடிசாவில் கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்தபடியே  ஆற்றைக் கடந்து சென்ற அவலம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  படம்: ஊடகம்

23 Aug 2019

கர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்துசென்ற கிராமமக்கள்

மகளைக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி.

23 Aug 2019

காங்கிரஸ்: மகளைக் கொன்றவரை நம்பும் சிபிஐ, சிதம்பரத்தை நம்பவில்லை