காலையில் திருமணம், மாலையில் மாயம்

சூலூர்: சூலூர் அருகே இருகூரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் மகள் நித்யா (21). சூலூரைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் நந்தகுமார் (29). இவர்களுக்கு சூலூரில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்று மாலை சுமார் 4 மணியளவில் மணமகள் நித்யா தனக்கு தலைவலிப்பதாக கூறினாராம். இதையடுத்து,

மனைவியை அழைத்துக்கொண்டு நந்த குமார் மருந்துக்கடைக்குச் சென்றுள்ளார். சூலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருந்துக் கடையில் தனது கணவரை மருந்து வாங்க அனுப்பிவிட்டு இருசக்கர வாகனம் அருகிலேயே நித்யா நின்றுகொண்டாராம். மருந்து வாங்கிவிட்டு நந்தகுமார் திரும்பிவந்தபோது நித்யாவை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சூலூர் போலிசார் நித்யாவை தேடி வருகின்றனர்.