சிலை கடத்தல்: தீனதயாளன் சரணடைந்தார்

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான தீனதயாளன் நேற்று போலிசில் சரணடைந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையில் வசிக் கும் தொழிலதிபர் தீனதயாள னின் பங்களாவில் கடந்த 31ம் தேதி மேற்கொண்ட சோதனை யில் ரூ.50 கோடி மதிப்பிலான 55 பழங்கால சிலைகள் மீட்கப் பட்டு, அது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறை யில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சோழர் காலத்தைச் சேர்ந்த 34 சிலை களும், தஞ்சை ஓவியங்களும் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட சிலை கள் அனைத்தும் 600 ஆண்டு கள் முதல் 1,000 ஆண்டுகள் வரை பழைமையானது என்று தொல்பொருள் வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், மூன்றாவது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலி சார் தீனதயாளனின் பங்களா வில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பங்களாவின் முதல் தளத்திலுள்ள ஓர் அறையை உடைத்துப் பார்த்த போது அதில் 4 ஐம்பொன் சிலைகள், 1 கற்சிலை, 3 கண்ணாடிக் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை போலிசார் மீட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்