லாரியில் குண்டு வெடித்ததால் பதற்றம்

மதுரை: நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த லாரியில் குண்டு வெடித்த தால் மதுரை நகரில் அதிர்ச்சி நிலவுகிறது. மதுரை ஓபுளாபடித்துறை அருகே உள்ள வைகை ஆற்று கரையோரத்தில் வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள் சரக்கை இறக்கி விட்டு இங்கு நிறுத்தி வைப்பது உண்டு. இதேபோல் நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு சரக்கு இல்லாத லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரியில் இரவு 11.30 மணி அளவில் திடீர் என பயங் கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத் ததும் விளக்குத்தூண் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது லாரியின் முன் பக்க டயருக்கு மேல் பகுதியில் லேசாக சேதம் அடைந்து இருந் தது தெரியவந்தது. அதன் அருகே ‘கேன்’, ‘டிபன் பாக்ஸ்’, ‘சார்ஜ் பேட்டரி’ ஆகியவை சிதறிக் கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி எந்த வகை குண்டு என ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த ‘டிபன் பாக்ஸ்’ வெடி குண்டு லாரியில் வைக்கப்பட்டு வெடிக்க செய்து இருப்பதால் லாரி டிரைவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பழி வாங்க வைக்கப் பட்டதா? அல்லது சரக்குகள் ஏற்றுவதில் ஏற்பட்ட முன் விரோ தத்தால் லாரியை சேதப்படுத்த குண்டு வைக்கப்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் சோதனை செய்து பார்த்தார்களா? என்ற பல்வேறு கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், வெடி குண்டு தடுப்புப் பிரிவு போலிசார் சென்று தடயங்களை சேகரித் தனர். மோப்ப நாயும் வரவழைக் கப்பட்டது. அது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்