ஆள் கடத்தல்;மூவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந் தவர் விஜயசங்கர். அரண்வாயல் குப்பத்தில் உள்ள தனியார் ‘பீர்’ கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம்தேதி விஜயசங்கர் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்ற போது வெங்கத்தூர் அருகே திருவள்ளூர் சென்னை நெடுஞ்சாலையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் திடீரென அவரை வழி மறித்து சரமாரியாகத் தாக்கினர். அந்த நேரத்தில் பின்னால் காரில் மற்றொரு வாலிபர் வந்தார். அவர்கள் மூவரும் விஜயசங்கரை குண்டுக்கட்டாகத் தூக்கி காரில் கடத்திச் சென்றனர். அப்போது அவரிடம் ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டினர்.

காரிலேயே அவர்கள் திருத்தணி, ஊத்துக்கோட்டை வரை சுற்றினர். பின்னர் விஜயசங்கர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம் எடுத்தனர். தொடர்ந்து, அவர் அணிந்து இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியையும் ஒரு மோதி ரத்தையும் பறித்துக்கொண்டனர். அதன்பிறகு விஜயசங்கரைக் கடத்திய இடத்திலேயே இறக்கி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து விஜயசங்கர் மணவாளநகர் போலிஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலிஸ் ஆய்வாளர் மணி மாறன் வழக்குப் பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட மணவாள நகரைச் சேர்ந்த சதாம் உசேன், ஒண்டிக்குப்பம் சரவணன், ராமா புரம் ரஞ்சித் ஆகிய மூவரைக் கைது செய்து சிறையில் அடைத் தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், மடிக்கணினி ஆகி யவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மேலும் நால்வரை அவர்கள் தேடி வருகின்றனர்.

சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர்களும் சீக்கிரம் பணம் சம் பாதிக்க வேண்டும் என்று கருதி னர். இதற்காக என்ன செய்வது என்று யோசித்தபோது தான் அப் பகுதியைச் சேர்ந்த விஜயசங்கரை மிரட்டி, பணம் பறிக்கலாம் என முடிவு செய்தனர். விஜயசங்கரை நன்கு கண் காணித்து கடத்தி உள்ளனர். அப் போது விஜயசங்கரிடம் அவரது மனைவி கைபேசியில் பேசியபோது, தான் போலிசில் புகார் செய்ததாக கூறி உள்ளார். இதனால் பயந்து போன கடத்தல் கும்பல் விஜய சங்கரிடம் இருந்து பணம், நகை களை பறித்துவிட்டு ஓடியதாக விசாரணையில் தெரியவந்தது.