எதிர்க்கட்சித் தலைவரானார் ஸ்டாலின்: அரசு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவராக திமுக பொரு ளாளர் ஸ்டாலின் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதை சபாநாயகர் தனபால் அங்கீகரித்துள்ளார். இதையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறி விப்பில், திமுக சட்டமன்ற கட்சித் தலைவரான ஸ்டாலினை, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் தனபால் அங்கீகரித்துள் ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அள வுக்கு தமிழக சட்டப்பேரவையில் 98 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உருவெ டுத்துள்ளது.

இந்நிலையில் 15ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 16ஆம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் ரோசய்யா பேரவையில் உரையாற்றுகிறார். இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல் கூட்டத் தொடரில் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். திமுகவுக்கு இம்முறை 89 எம்எல்ஏக்கள் இருப்பதால் சட்டப் பேரவை வளாகத்தில் பெரிய அறையை ஒதுக்க வேண்டும் என பேரவைச் செயலாளரிடம் திமுக கொறடா சக்கரபாணி மனு அளித் துள்ளார். மேலும், திமுக தலைவர் கருணாநிதியும் அவை நடவடிக்கை களில் பங்கேற்க ஏதுவாக, அவருக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்றும் திமுக தரப் பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்