காவல்துறையினரின் யோகாசன பயிற்சி

சென்னை போலிசாரின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், பணி காரணமாக மன உளைச்சலுக்கு ஆட்படாமல் இருக்கவும் வாரந்தோறும் சிறப்பு யோகாசன பயிற்சி வகுப்புகளை நடத்த சென்னை பெருநகரக் காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக நடந்த யோகாசன பயிற்சியில் அவரும் பங்கேற்றார். இச்சமயம் சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. சென்னையில் மொத்தம் 22 இடங்களில் 4,500 போலிஸாருக்கு யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டன.