மலேசியாவில் வரலாற்றுத் திருவிழா: கருணாநிதிக்கு நேரில் அழைப்பு

சென்னை: மலேசியாவில் நடை பெற உள்ள 'வரலாற்றுத் திரு விழா'வில் பங்கேற்குமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு மலேசி யாவின் கல்வித் துணை அமைச் சர் கமலநாதன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. தற்போது அங்கு ஏராளமான தமிழ்ப் பள்ளி கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள பினாங்கு மாநிலத்தில் முதல் தமிழ்ப்பள்ளி தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைய உள் ளதை 'வரலாற்றுத் திருவிழா' என்ற பெயரில் கொண்டாட உள் ளனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமென கருணா நிதியிடம், மலேசிய அமைச்சர் கமலநாதன் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவ ரான மு.க.ஸ்டாலினையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் அமைச்சர் கமலநாதன். அப்போது வரலாற்றுத் திரு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும், விழா தொடர் பாக ஸ்டாலினுடன் அவர் ஆலோ சனையும் நடத்தினார். இச்சந்திப்பின்போது சிங்கப் பூரைச் சேர்ந்த ஜோ‌ஷுவா குமார், மலேசிய கல்வித்துறை உயரதி காரி தினேஷ் தினகரன், ஆகி யோர் உடனிருந்ததாக திமுக தலைமையகம் தெரிவித்துள்ளது. திமுக தலைவரைச் சந்தித்த மலேசிய கல்வித் துணை அமைச்சர் கமலநாதன் (இடமிருந்து 2வது) படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!