சென்னை காங்கிரஸ் அலுவலகம் முன்பு இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்

சென்னை: சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படும் சத்தியமூர்த்தி பவன் அலுவலகம் முன்பு நேற்று இரு தரப்பு ஆதர வாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு தோல்வியடைந்த தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலை வர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர் களும் தமிழக காங்கிரசின் தற்போதைய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அண்மைய சட்டமன்றத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட் டியிட்ட விஷ்ணுபிரசாத் தோல்வி அடைந்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த விஷ்ணுபிரசாத், தேர் தலில் தோல்வியடைந்ததற்கு இளங்கோவன் உட்பட பலரை குறை கூறியிருந்தார். இதையடுத்து தமிழக காங் கிரஸ் தலைவர் இளங்கோவன், விஷ்ணுபிரசாத்தை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுபிரசாத்தின் ஆதரவாளர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று சத்திய மூர்த்தி பவன் முன்பு திரண்ட விஷ்ணுபிரசாத்தின் ஆதரவாளர் களான சண்முகசுந்தரம், ஜி.ஜி. இளங்குமரன், தளபதி பாஸ்கர், பயாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் இளங்கோவன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் அதனை கைத்தொலைபேசியில் படம் பிடித்தார். இதனால் கோபமடைந்த விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்களில் ஒருவர் அவரைத் தாக்கினார்.

இதற்கிடையே சத்தியமூர்த்தி பவனில் இருந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் வெளியில் ஓடி வந்தனர். விஷ்ணு பிரசாத்தின் ஆதர வாளர்கள் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்டனர். இவர்களுக்குப் போட்டியாக முன்னாள் மாநில செயலாளரும் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரு மான ஆலடி சங்கரய்யா உள்ளிட்ட இளங்கோவன் ஆதரவாளர்கள், இளங்கோவனுக்கு ஆதரவாக வாழ்த்தி முழக்கமிட்டனர். அப்போது விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவனின் உருவபொம்மையில் பெட்ரோல் ஊற்றியதால் இளங்கோவன் ஆதர வாளர்கள் அவர்களை தாக்க முயற்சி செய்தனர். இரு தரப் பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற் பட்டது. அங்கிருந்த காவல் துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்களும் இளங்கோவன் ஆதரவாளர்களும் நேற்று கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் பிரித்து சமாதானம் செய்தனர். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!