'அதிமுக ஆட்சியில் தினமும் ஒன்றிரண்டு கொலைகள் என்பது வாடிக்கை ஆகிவிட்டது'

சென்னை: அதிமுக ஆட்சியில் தின மும் ஒன்றிரண்டு கொலைகள் நடப்பது என்பது சென்னையில் வாடிக்கையாகி விட்டது என தமிழக பாரதிய ஜனதா தலைவி தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழகத்தில் உள்ள கூலிப்படைகளைத் தண்டிக்க, தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். “சென்னையில், தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு கொலைகள் நடக்கும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். “மக்களுக்காகப் போராடுபவர்களுக்கே இந்தக் கதியா என்ற அச்சம் மக்கள் மத்தியில் இப்போது நிலவு கிறது,” என்று தமிழிசை கூறியுள்ளார்.

சென்னை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழக அளவிலும் இதே நிலைதான் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், தலைநகரிலேயே இத்தகைய போக்கு அதிகரித்து வரு வது கவலை தருவதாகக் கூறியுள்ளார். “இத்தகைய நிலையானது காவல் துறைக்குப் பெருமை தராது. சட்டத் தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் எளிதில் தப்பி விடு கின்றனர். எனவே, கூலிப்படைகளை வேரோடு அழிக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்,” என்று தமிழிசை மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்