காட்சியகத்தில் புகுந்து 7 கார்கள் கொள்ளை

சென்னை: புற­ந­கர்ப் பகு­தி­யான மணப்­பாக்­கத்­தில் உள்ள ஹோண்டா கார் காட்­சி­ய­கத்­தில் 20 பேர் கொண்ட கும்பல் நேற்று அதிகாலை புகுந்து காவ­ லா­ளியைப் பல­மா­கத் தாக்கி விட்டு 7 ஹோண்டா வாக­னங்களைத் திருடிச் சென்றது. கொள்ளை சம்பவம் பற்றி காவலாளி உட­ன­டி­யா­க நிர்­வா­கத்­துக்குத் தகவல் அளித்­தார். அதனை அடுத்து போலி­சா­ருக்கு தகவல் தரப்பட்டு உட­ன­டி­யாக போலிஸ் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இந்த நிலையில், வள­ச­ர ­வாக்­கம் பகு­தி­யில் 7 புத்தம் புதிய ஹோண்டா வாக­னங்கள், நம்பர் பிளேட்­டு­டன் நிற்­ப­தா­கக் கிடைத்த தக­வ­லின் அடிப்­படை­யில் காட்­சி­யக ஊழி­யர்­கள் அவ்­வி­டத்­துக்கு விரைந்து சென்ற­னர்.

அந்த வாகனங்­­களில் எண் தக­டு­கள் பொருத்­தப்­பட்­டி­ருந்தது. ஆனாலும் வாக­னங்களை ஊழி­யர்­கள் அடை­யா­ளம் கண்ட­னர். கொள்ளைக் கும்பல் அந்த வாக­னங்களில் போலி எண் தக­டு­களைப் பொருத்­தி­யி­ருக்கும் என சந்­தே­கிக்­கப்­படு­கிறது. கொள்ளைக் கும்பல் வள­ச­ர­வாக்­கத்­தில் விட்டுச் சென்ற 7 புத்தம் புதிய வாக­னங்களை­யும் போலிசார் மீட்­டுள்­ள­னர். மிகவும் நூதன முறையில் நடத்தப்பட்ட இந்தத் துணிகர கொள்ளைச் சம்ப­வம் குறித்த விசாரணையை போலிசார் மேற்­கொண்டுள்ளனர். ஹோண்டா நிறுவனத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.2016-06-09 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!