கூலிப்படை கலாச்சாரத்துக்கு முடிவு: ஸ்டாலின் வலியுறுத்து

சென்னை: கூலிப்படை கலாச்சாரத்துக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அக்கலாச்சாரம் பரவி வருவதாக தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் கவலை தெரிவித்துள்ளார். "சென்னையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் பாரஸ்மால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் சென்னை மாநகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும், போராடியும் வந்தவர் பாரஸ்மால். "கட்டட விதிமுறைகள் தொடர்பில் போராடி வந்த ஆர்வலரின் கொலை, தகவல் உரிமைச் சட்டத்திற்கே விடப்பட்ட சவாலாக அமைந் திருக்கிறது," என ஸ்டாலின் கூறியுள்ளார்.

கூலிப்படையினர் நடமாட்டம் குறித்தோ, ஆங்காங்கே நடக்கும் கூலிப்படைகளின் கொலைகள் தொடர்பிலோ காவல்துறை முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எதையும் எடுத்தி ருப்பது போல தெரியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அவர், நாளுக்கு நாள் பெருகி வரும் கூலிப்படைக் கலாச்சாரம் மக்களை பீதியில் உறைய வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!