குற்றாலம்: குறைந்தது வெள்ளப்பெருக்கு

குற்றால அருவிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து நேற்று முன்தினம் தண்ணீர் சீராக விழுந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பெரிய அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். படம்: ஊடகம்