20 செயலர்களை நீக்குகிறது திமுக

'சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம்' என்று நம் பிக்கையோடு இருந்த திமுகவுக்கு தோல்வியே மிஞ்சியது. கட்சித் தலைவர் கருணாநிதி, பொரு ளாளர் மு.க. ஸ்டாலின், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி என்று திமுகவின் முன்னணித் தலைவர்கள் பலரும் மாநிலம் முழுவதும் தீவிரமாக வாக்கு வேட்டையாடினார்கள். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவுக்கு ஆதரவு அலை வீசியதுபோலத் தோன்றியது. பெரும்பாலான ஊடகக் கணிப்பு களும் திமுக ஆட்சியைப் பிடித்து விடும் என்றே தெரிவித்தன.

தோல்வியடைந்தபோதிலும் திமுக அதனை வேறு மாதிரியாகப் பார்க்கிறது. கருத்துக்கணிப்பு கள் உண்மை நிலவரத்தையே படம்பிடித்துக் காட்டியதாகவும் ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேவை யான 20 இடங்களிலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக தோற்றுள்ளதாகவும் அது கருதுகிறது. அந்த 20 தொகுதிகளின் தோல்விக்கும் சொந்தக் கட்சி யினரின் உள்ளடி வேலைதான் காரணம் என்று திமுக நிர்வாகி கள் மீது மலைபோல் புகார்கள் குவிந்தன. அவற்றைக் கவனித்த திமுக தலைமை, கட்சி வேட்பாளரின் வெற்றிக்காகப் பாடுபடாத நிர்வாகிகளை பதவி யிலிருந்து நீக்கத் தொடங்கி உள்ளது. வந்து குவிந்தவற்றில் மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்கள்தான் அதிகம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!