பயணப்பெட்டி, கட்டணம் ஆகியவற்றில் இந்திய விமானப் பயணிகளுக்கு சலுகைகள்

விமானப் பயணிகளுக்குச் சலுகை அளிக்கும் வகையில் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு சில நடவடிக்கைகளை முன்வைத்து உள்ளது. இவை அமலுக்கு வந் தால் விமானப் பயணம் மிகவும் சொகுசான ஒன்றாக அமையும் என்று நம்பப்படுகிறது. உத்தேச நடவடிக்கைகளை நேற்று அறிவித்த அமைச்சு, விமானப்பயண ரத்து கட்டணத்தை எளிமையாக்க வலியுறுத்துகிறது.

ஒருவர் தமது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் அதற்கான கட்டணம் அவரது பயணச்சீட்டின் அடிப்படைக் கட்டணத்திற்கு மிகா மல் இருக்க வேண்டும் என்பது பரிந்துரைப்பு. பயணச்சீட்டு வைத்திருந்தும் அதிகமானோர் பதிவு செய்துள் ளதைக் காரணம் காட்டி பய ணத்துக்கு அனுமதிக்கப்படாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணம் மறுக்கப்படும்போது அடுத்த 12 மணி நேரத்திற்குள் அந்தப் பயணிக்கு மாற்றுப் பயண ஏற்பாட்டை விமான நிறுவனம் செய்து தரவேண்டும். அதனைச் செய்யத் தவறும்போது பயணக் கட்டணத்தில் 200 விழுக்காட்டை பயணிக்குத் தர வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!