சென்னை: தபால் பெட்டியில் மீண்டும் கடப்பிதழ்கள் கண்டெடுப்பு

சென்னை: மூன்றாவது முறையாக தபால் பெட்டியில் சில கடப்பிதழ்கள் கண்டெடுக்கப்பட்டது சென்னை, நங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2ஆம் தேதி மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் பெட்டியில் 23 கடப்பிதழ்கள் இருப்பதைக் கண்ட அஞ்சல் ஊழியர் போலிசுக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அதே தபால் பெட்டியில் மீண்டும் 13 கடப்பிதழ்கள் கிடந்தன. தற்போது மூன்றாவது முறையாக அதே தபால் பெட்டியிலிருந்து 15 கடப்பிதழ்களைக் கண்டெடுத்துள்ளனர். இதுவரை 51 கடப்பிதழ்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!