சிறுவர் கொடுமை: இரண்டு போலி சாமியார்கள் கைது

28 சிறுவர்களைக் கொடுமைப் படுத்தியதற்காக இரண்டு போலி சாமியார்களை மும்பை போலிசார் கைது செய்துள்ள னர். மும்பைக்கு வடக்குப் பகுதி கண்டிவ்லி நகர் அருகே தாகூர் கிராமத்தில் உள்ள பங்களா வீடு ஒன்றில் அந்தச் சிறுவர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவர்களை போலிசார் மீட்டுள்ளனர். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அச்சிறுவர்கள் மூன்று மாதங் களுக்கு முன்னர் அந்த பங்க ளாவுக்குக் கொண்டு செல்லப் பட்டதாக மும்பை போலிஸ் துணை ஆணையர் கிரண் சவான் தெரிவித்தார்.

அந்த பங்களா வீடு எவரும் எளிதில் கண்டுபிடிக்காத வண்ணம் பச்சைத் துணியால் போர்த்தப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறினார். "மந்திரங்களை ஓதச் சொல்லி அச்சிறுவர்கள் அடித்து கொடுமைப்படுத்தப் பட்டனர். அவர்களில் சிலரை ஒரே காலில் 16 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை நிற்கச் சொல்லி துன்புறுத்தி னர். "கொடுமைகளைத் தாங்க முடியாத சிறுவன் ஒருவன் தமது பெற்றோரை கைபேசியில் அழைத்து நடந்த விவரத்தைக் கூறினான். "அதனைத் தொடர்ந்து போலிச் சாமியார்களைச் சுற்றி வளைத்து கைது செய்தோம். அவர்களிடம் விசாரணை நடத் தப்பட்டு வருகிறது," என்றார் சவான். மோசடி, அடித்துத் துன்புறுத் தல், கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இரு போலி சாமியார்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!