மதுரை மருத்துவமனையில் உயிரைப் பறித்த 300 ரூபாய் லஞ்சம்

அவசர சிகிச்சை தேவைப்பட்ட நோயாளி ஒருவரின் உயிர் 300 ரூபாய் லஞ்சம் தரப்படவில்லை என்பதற்காக பறிபோய்விட்டது. மதுரையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ராஜேந்திர பிரசாத், 18, (படம்) என்பவருக்கு கடந்த மாதம் 2ஆம் தேதியன்று மூச்சுத்திணற லும் வலிப்பும் ஏற்பட்டது. இதனால் அவரை ஆம்புலன் ஸில் அவசரமாகக் கொண்டு சென் றார் கணபதி. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவப் பிரிவில் காலை 10 மணிக்கு ராஜேந்திர பிரசாத் திற்கு முதலுதவி அளிக்கப் பட்டுள்ளது.

பின்னர் அவர், அவசர சிகிச்சை பிரிவுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளார். ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்ப தற்கான அனுமதிச் சீட்டு 20 நிமி டங்களுக்குப் பிறகே வழங்கப் பட்டுள்ளது. அதற்காக கணபதி வரிசையில் காத்துக்கிடந்தார். பின்னர் ராஜேந்திர பிரசாத்தை தள்ளுவண்டியில் எடுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர் ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார். கணபதி அதனைத் தர மறுத்ததால் அந்த ஊழியர் தள்ளுவண்டியை இயக்க மறுத்து அங்கிருந்து சென்றுள் ளார். மருத்துவ அனுமதிச் சீட்டை யும் அந்த ஊழியர் தம்முடனே கொண்டு சென்றுவிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!