தவறான செயல்பாடுகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது: இந்திய கம்யூனிஸ்ட் புகார்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திலும் நாட்டு மக்களிடமும் எதையும் வெளிப்படையாகப் பேசுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசின் தவறான செயல் பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப் பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டதைப் போல பாஜகவினர் தம்பட்டம் அடித்து வருகிறார்கள்.

"ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு இந்துத்துவ மதவெறி சக்திகளின் செயல்பாடு கள் அதிகரித்துள்ளன. மத்திய அரசு அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகி றார்கள்," என்றார் டி.ராஜா. இத்தகைய செயல்பாடுகள் காரணமாக நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறை வேற்றவில்லை என்றார்.

தொழில், விவசாயம், சேவைத் துறை என அனைத்துத் துறை களிலும் நெருக்கடி நிலை நிலவுவதாகவும் வேலையில்லாத் திண்டாட்டம் முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது என்றும் டி.ராஜா கவலை தெரிவித்தார்.2016-06-13 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!