குவியல் குவியலாக மேலும் பல புராதன சிலைகள்; பெங்களூரு விரைந்தது போலிஸ்

கோவில்களில் உள்ள பழங்கால சிற்பங்களையும் பல அரிய சிலை களையும் வெளிநாடுகளுக்குக் கடத்தி வரும் கும்பல் பற்றி மேலும் பல தகவல்கள் கிடைத்து உள்ளன. கடந்த 3ஆம் தேதி போலிசில் சரணடைந்த சிலைக் கடத்தல் கும்பல் தலைவன் தீனதயாளனி டம் (வயது 84) கடந்த பத்து நாட் களாக போலிசார் நடத்திய விசா ரணையில் மேலும் பல இடங் களில் சிலைகள் பதுக்கி வைக் கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதன் பின்ன ணியையும் அவர் போலிசாரிடம் விளக்கி உள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையில் உள்ள தீனதயாளனின் வீட்டில் மட்டுமே இதுவரை சோதனை மேற்கொள் ளப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்வார்பேட்டை வட்டாரத்தி லேயே மேலும் இரு இடங்களில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அந்த இடங்களில் உள்ள சரக்குக் கிடங்குகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்தச் சரக்குக் கிடங்கில் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த மேலும் 189 சிலைகள் பறிமுதல் செய்யப்பட் டன. 55 பழங்கால ஓவியங்கள், 55 பழங் கால கற்பொருட்கள், இரண்டு புராதன விளக்குகள் ஆகியன அவற்றுள் அடங்கும்.

இதுவரை கைப்பற்றப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. • தீனதயாளனின் சரக்குக் கிடங்குகளில் பெட்டிபெட்டியாக பதுக்கி வைக்கப்பட்ட சிலைகள். கடந்த இரு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் இவை சிக்கின. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!