ஏழு ஆடவர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது

திருப்பூர்: ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேரை மணந்து மோசடி செய்த பெண்ணை திருப்பூர் போலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது. பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் தன்னை திருமணம் செய்து கொண்டவரிடம் அதிகளவில் பணம், நகைகளை பறித்து ஏமாற்றி உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் என்பவர் அண்மையில் திருப்பூர் போலிசாரிடம் மாரியம்மாள் மீது புகார் அளித்தார். அதில், தன்னை யும் சேர்த்து 7 பேரை மாரியம்மாள் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தார்.

"எங்களிடம் கூடுமானவரை பொய்யான தகவல்களை மட்டுமே மாரியம்மாள் கூறியுள்ளார். அவ ரது வார்த்தைகளை சுலபத்தில் நம்பி 7 பேருமே அதிகளவில் பணம், நகைகளை கொடுத்திருக்கிறோம். எனக்கு இப்போது தான் மாரியம்மாள் என்னை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. எனவே அவரைக் கைது செய்து எங்க ளிடம் இருந்து பறித்த நகை, பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்," என செல்வகுமார் தமது மனுவில் மேலும் தெரிவித் துள்ளார். இதையடுத்து மாரியம்மாளுக்கு திருப்பூர் போலிசார் வலை வீசினர். தீவிர விசாரணையின் போது அவர் உடுமலைப்பேட்டையில் தங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலிசார் அங்கு விரைந்து சென்று அவரை வளைத்துப் பிடித்தனர். உடுமலைப்பேட்டையில் இருந்து பேருந்தில் வெளியூர் செல்ல உள் ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மாரியம்மாள் கைது செய்யப்பட்டார். ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேரைத் திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்ததாக பெண் ஒருவர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரியம்மாளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!