தீமிதித் திருவிழாவில் குழந்தையுடன் நெருப்பில் தடுமாறி விழுந்த ஆடவர்

இந்தியாவின் வட மேற்கு மாநிலமான பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் நகரில் 'மா மாரியம்மா மேளா' என்ற திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இடம்பெற்ற தீமிதி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒரு ஆடவர் தன் குழந்தையுடன் தனது நேர்த்திக் கடனைச் செலுத்த ஆயத்தமானார். அப்போது தீயை மிதித்து ஓடியபடி பாதி தூரம் வந்தவர் எதிர்பாராதவிதமாக கனன்று கொண்டிருந்த நெருப்பில் தன் இடுப்பில் சுமந்திருந்த குழந்தையுடன் கால் தடுமாறி விழுந்தார். அவரை அருகில் இருந்த மற்ற பக்தர்கள் மீட்டனர். இந்த விபத்தில் தந்தை, குழந்தை இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. பக்தர்கள் 7 நாட்கள் விரதமிருந்து இந்த நேர்த்திக் கடனைச் செலுத்துவது வழக்கம். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!