தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களைக் களையெடுக்க திமுக முடிவு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகக் கூறப் படும் நிலையில், திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டம் கருணாநிதி தலை மையில் நடைபெற இருப்பதாக திமுக சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் திமுகவின் 89 சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற் பர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனி னும் அவரது தலைமையில் அல் லாமல் கட்சித் தலைவர் என்ப தால் கருணாநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அண்மைக்காலமாக திமுக வில் தலைமைத்துவ போராட்டம் நடப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கருணாநிதி, ஸ்டாலின் ஆதரவா ளர்கள் சமூகவலைத்தளப் பதிவு கள் மூலம் மறைமுகமாக மோதி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!