‘இலவச மின்சாரத் திட்டம் அமலுக்கு வரும்; ஆனால் வராது’

நெல்லை: இலவச மின்சாரத் திட்டம் எந்தத் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது எனத் தெரியாமல் குழப்பமடைந்துள்ள பொதுமக்கள் பலரும் 'இலவச மின்சாரத் திட்டம் அமலுக்கு வரும்; ஆனால் வராது' என்று கருத்து கூறி வருகின்றனர். சட்டசபை தேர்தலின்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே மாதம் 23ஆம் தேதி அவர் முதல்வராகப் பதவி ஏற்றதும் உடனடியாக தனது முதல் உத்தர வாக மின் கட்டண சலுகைக்கான உத்தரவில் கையெழுத்திட்டார். 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் முதல்வர் கையெழுத்து போட்ட நாள் முதலே அமலுக்கு வரும் என பொதுமக்கள் எதிர் பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கான மின் கட்டண கணக்கீடு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் பலருக் கும் பழைய கட்டணமே வந்துள் ளது. அதாவது பயன்படுத்திய மின் சாரத்திற்கு ஏற்றாற்போல் முழுமை யாகக் கட்டணத்தை கட்ட வேண் டும் என மின் கட்டண கணக்கீட் டாளர்கள் எழுதிக் கொடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, 90 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.70 கட்டணமாக செலுத்தவேண்டும் என கூறப்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மக்கள் மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்று விபரம் கேட்டால் அவர்கள் சரியான பதில் அளிக்க மறுப்ப தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "இதற்கான பிரத்தியேக மென் பொருள் இன்னும் வரவில்லை. அது வந்தால்தான் புதிய திட்டத் தின்படி மின் கணக்கீட்டு முறை அமலுக்கு வரும். ஜூன் 7ஆம் தேதிக்கு முன்பே கணக்கு எடுக் கப்பட்டவர்களுக்கு கட்டணத்தில் சலுகை இல்லை. ஆனால், அதன் பிறகு கணக்கு எடுக்கப்பட்ட வர்களுக்கு குறிப்பிட்ட கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது," என்று விளக்கம் அளித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!