பேரவையில் சரியான முறையில் இருக்கை அளித்தால் கருணாநிதி கலந்துகொள்வார்

பேரவையில் கருணாநிதிக்கான இருக்கை: ஸ்டாலின் அதிருப்தி சென்னை: சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சரியான முறையில் இருக்கை ஒதுக்கப்பட்டால் நிச்சயம் அவர் கலந்துகொள்வார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி வந்து செல்வதற்கு வசதியாக இந்த இருக்கை ஒதுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் இருக்கைக்கு பின்புறம், அதாவது இரண்டாவது வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கருணாநிதி அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வசதியானதாக அந்த இருக்கை இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி கோரியபடி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அவருக்கு இருக்கை வசதி செய்து தரப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.