5,200 பேர் மீது வழக்கு: பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

சென்னை: பொது இடங்களில் புகைபிடித்த குற்றத்தின் பேரில் மாநிலம் தழுவிய அளவில் 5,200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் புகை பிடிப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து பலர் போலிசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையடுத்து அபராதத் தொகை மேலும் அதிகரிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, மருத்துவ மனை அருகே புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது பொது சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை சிறப் புக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே புகை யிலைப் பொருட்களை விற்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. இக்குழுவினர் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை நேற்று முன்தினம் சுற்றி வளைத்து அபராதம் விதித்தது. சில இடங்களில் போலிசார் வருவதைக் கண்டு புகைபிடித்த வர்கள் ஓட்டம் பிடிக்க, அவர் களைப் போலிசார் துரத்திப் பிடித்து அபராதம் விதித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!