ரூ.100 கோடி மோசடி: மதன் மீது வழக்குப் பதிவு

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமான பட அதிபர் மதன் கண்டுபிடிக்கப்பட்ட உடன் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. நூறு கோடி ரூபாய் வரை வசூலித்து அவர் மோசடி செய்திருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பேரிலேயே அவர் கைதாவார் எனக் கூறப்படுகிறது. வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபரான மதன், கங்கையில் மூழ்கி தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தலைமறைவானார். எஸ்ஆர்எம் குழும அதிபர் பாரிவேந்தருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே அவர் இத்தகைய முடிவுக்கு வந்த தாகத் தெரிகிறது. ஆனால் தமக்கும் மதனுக்கும் இடையே எந்தவிதமான தொடர்போ, மோதலோ இல்லை என பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் மருத் துவப் படிப்பு, மருத்துவ மேல்படிப்புக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பணம் பெற்று தங்களை ஏமாற்றியதாக மதன் மீது இதுவரை 63 பேர் புகார் கொடுத்துள்ளனர் என்றும் இந்த வகையில் அவர் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மதன் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. எனவே மதன் கண்டுபிடிக்கப் பட்டால் உடனடியாக மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!