பேய் படம் பார்த்த ரசிகர் அதிர்ச்சியில் மரணம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை டவுன் செங்கம் சாலையில் உள்ள திரையரங்கத்தில் பேய் படம் பார்த்தவர் அதிர்ச்சியில் மரணமடைந்தார். இந்தத் திரையரங்கத்தில் அண்மையில் வெளியான 'காஞ் ஜீரிங் 2' என்ற ஆங்கில படம் திரையிடப்பட்டுள்ளது. ஏராளமான ரசிகர்கள் படத்தை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராம் மோகன், வயது68, என்பவரும் அந்தப்படத்தைப் பார்க்க வந்திருந்தார். இரவு 9 மணி அளவில் படத்தின் உச்சக்கட்ட திகில் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

பேய்களாகவும் பிணக்குவியல்களாகவும் காண்பிக்கப்பட்ட காட்சிகளை பெண்கள், குழந்தைகள் உட்பட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அடுத்தடுத்து திகில் காட்சிகள் இடம்பெற்றதால் திரையரங்கத்தில் ரசிகர்களின் ஆரவாரம் குறைந்து மயான அமைதி நிலவியது. அப்போது பேய்களின் உச்சக் கட்ட கோரக் காட்சியின்போது ராம்மோகன் பயத்தில் அலறி கத்தினார். அதிர்ச்சியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உயிருக்குப் போராடிய அவரை அருகே உட்கார்ந்து இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்துத் திரையரங்க மேலாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. திரையரங்க ஊழியர்கள் விரைந்து வந்து நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ராம்மோகனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகக் கூறினர். இதையடுத்துப் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்துத் திருவண்ணாமலை டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திரு ராம்மோகன், திருவண்ணாமலைக் கிரிவலப் பாதை யில் உள்ள ரமணா ஆசிரமத்துக்கு மாதத்திற்கு ஒருமுறை வந்து செல்வது வழக்கம்.

அதன்படி, ஆசிரமத்திற்கு நேற்று முன்தினம் வந்திருந்தார். அப்போது பொழுதைக் கழிப்பதற்காக திரையரங்கத்துக்கு சென்ற அவர் பேய் படம் பார்த்து உள்ளார். இந்தச் சம்பவம் திருவண்ணாமலை திரைப்பட ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!