தேமுதிகவை மீட்க விஜயகாந்த் புதிய கோணத்தில் யோசனை

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியை மீட்டெடுப்பதற்காக பல வித கோணங்களில் யோசித்தும் ஆலோசனை நடத்தியும் வருகிறார். அவற்றில் பாரதிய ஜனதா பக்கம் சாய்வதும் ஒன்று. தேமுதிக தேய்ந்துவரும் வேளையில் அக்கட்சியின் முகாமில் அரசியல் ஆலோசனை தீவிரமாகி வருகிறது. தேமுதிக தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான சேகர் கட்சியிலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக மாநகராட்சி கவுன்சிலர் ஆறுமுகம் மாவட்ட செயலாளராக ஆக்கப்பட்டார். ஆனால் அவரும் திமுகவில் சேர்ந்துவிட்டதால் தேமுதிகவின் நிலை பரிதாபமானது.

தேமுதிகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் நாளுக்கு நாள் விலகுவதால் கட்சியை சரிவி லிருந்து மீட்கும் முயற்சி குறித்து விஜயகாந்த் யோசித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோ சனைக் கூட்டம் 20ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் வரு கின்ற உள்ளாட்சி தேர்தலில் சாதிக்க முடியும் என்ற கட்சி நிர் வாகிகளுக்கு அவர் நம்பிக்கை யூட்டி வருகிறார். ஆகஸ்டு 25ஆம் தேதி பிறந்த நாளைக் கொண் டாடும் விஜயகாந்த், அன்று முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் மேல்மட்ட நிர்வாகிகள் சிலர், தொடர்ந்து நெருக்கடியில் இருந்தால் சிரமம் என்று விஜயகாந்திடம் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா பக்கம் சாயவும் சில நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியிருக்கின்றனர். மற்றொரு நிலவரத்தில் அலகாபாத் செயற்குழு கூட்டத்துக்குச் சென்ற தமிழக பாரதிய ஜனதா தலைவர்களிடம் விஜயகாந்த் பற்றி அமித்ஷா அக்கறையுடன் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலும் விஜயகாந்த் காதுகளுக்கு எட்டியது. இதனால் பாஜக தலைவர்கள் மீது விஜயகாந்துக்கு நல்லெண்ணம் ஏற் பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சி யை சரிவில் இருந்து மீட்கவும் தொண்டர்களைத் தக்க வைக்கவும் பாஜக பக்கம் சாய்வதே சிறந்தது என்று விஜயகாந்த் யோசிப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தியபிறகு இது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார் என்று கட்சி வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!