சோனியா பற்றிய ‘வாட்ஸ்அப்’ பதிவால் சண்டை; 33 வயது ஆடவர் கொலை

ஜபல்­பூர்: மத்திய பிரதேச மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்­தியைக் கொச்சைப்­படுத்­தும் விதமாக 'வாட்ஸ்அப்' குழுவில் படம் வெளி­யா­னதை­ ய­டுத்து இரு தரப்­பி­ன­ரிடையே மோதல் ஏற்­பட்­டது. நேற்று முன்தினம் அதி­காலை­யில் நிகழ்ந்த இந்த மோதலில் 33 வயது இளைஞர் ஒருவர் பலி­யா­ன­தா­க­வும் மேலும் 6 பேருக்­குப் பலத்த காயம் ஏற்­பட்­ட­தா­க­வும் போலிசார் தெரி­வித்­த­னர். காங்­கி­ரஸ் கட்சியைச் சேர்ந்த இணை­ய­தள ஆர்­வ­ல­ரான ஜதின் ராஜ் 'வாட்ஸ்அப்'பில் 'விஜய் நகர் பிரெண்ட்ஸ்' என்ற குழுவைத் தொடங்கி அதில் உள்ளூர் மக்கள் பலரை இணைத்­துள்­ளார். அந்தக் குழுவில் அங்கம் வகித்த பிர­சாந்த் நாயக் என்­ப­வர் சோனியா சோனியா காந்தி பாத்­தி­ரம் துலக்­கு­வது போன்ற படத்தையும் அதன் கீழே அவரை இந்த அள­வுக்­குத் தோல்வி அடையச் செய்­த­வர் பிர­த­மர் மோடி என்று குறிப்­பி­டப்பட்­டி­ருந்த­தையும் 'வாட்ஸ் அப்'பில் பதிவேற்றினார்.

இதை­ய­டுத்து, பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் ஜபல்­பூ­ரில் உள்ள 'அஹிம்சா செஷ்க்' என்ற பகு­தி­யில் கூடி கடும் வாக்­கு­வாதத்­தில் ஈடு­பட்­ ட­னர். இது­கு­றித்து கிடைத்த தக­வ­லின்­பே­ரில் அங்கு சென்று அந்த இரண்டு குழு­வி­னரை­யும் காவல் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்றனர் போலிசார். இந்­நிலை­யில், நேற்று முன் தினம் அதி­காலை­யில் காவல் நிலை­யத்­தி­லேயே அவர்­களுக்­குள் மோதல் ஏற்­பட்­டது. இதில் காய­மடைந்த இளைஞர் ஒருவர் மருத்­து­வ­மனை­யில் உயி­ரி­ழந்தார் என்று போலிசார் தெரி­வித்­த­னர். மோதலில் பலியான அவர் காங்­கி­ரஸ் கட்சியைச் சேர்ந்த­வர் என்றும் காவல் நிலை­யத்­தில் உள்ள கண்­கா­ணிப்பு புகைப்­ப­டக் கரு­வி­வில் பதிவான இந்தக் காட்­சி­களை பகி­ரங்க­மாக வெளியிட வேண்டும் என்றும் அக்­கட்­சி­யி­னர் போலிசாரிடம் வலியு­றுத்­தி­ வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!