திக் விஜய் சிங்: மோடியிடம் தேநீர் வாங்கி இருந்தால் ரூ.2 லட்சம் பரிசு

புது­டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் சேர்ந்து படித்திருந்தாலோ, அல்லது அவரிடம் தேநீர் வாங்கி இருந்தாலோ அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் விவசாயி களுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 'சாய் கி சர்சா' என்ற தலைப்பில் பேரணி நடத்தப் பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திக் விஜய் சிங், "தாம் தேநீர் விற்றதாகக் கூறியதுடன் தேர்தல் பிரசாரத் திலும் அதை ஒரு உத்தியாக மோடி பயன்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் ஒருவர் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன் என்று கூறினாலோ, அவரிடம் தேநீர் வாங்கியிருந்தாலோ கண்டிப்பாக அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்," என்றார். மேலும், பள்ளிக் கல்வியை முடித்துப் பல்கலைக் கழக நுழைவுக்குத் தயாராக இருந்ததாக முன்பு கூறிவிட்டு இப்போது பட்டதாரி என மோடி கூறிக்கொள்வது வியப்பாக உள்ளது எனவும் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!