7 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பினார் காணாமல் போன ராணுவ வீரர்

புதுடெல்லி: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டேராடூனில் தரம்வீர் சிங் என்பவர் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அந்த வாகனத்தில் இருந்த மூன்று பேரும் இறந்து போனதாகச் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் யாருடைய உடலும் அங்கிருந்து மீட்கப்படவில்லை. சம்பவம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் வரை அம்மூவர் பற்றிய செய்தி எதுவும் கிடைக்காததால் அவர்கள் இறந்துபோனதாக ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் தரம்வீர் சிங் கடந்த வாரம் வீடு திரும்பி குடும்பத்தாரை இன்ப அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளார்.

அந்த விபத்தில் அவர் நினைவிழந்த தால் டேராடூனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிச்சை எடுத்து சுற்றித் திரிந்த அவர் அண்மையில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவரால் விபத்துக்குள்ளானார். அப்போது தரம்வீர் சிங்குக்கு நினைவு திரும்பவே, சொந்த ஊருக்குத் திரும் பினார். சினிமா கதைபோல இருந்தாலும் தம் கணவர் என்றாவது ஒரு நாள் திரும்பி வந்துவிடுவார் என நம்பியதாக தரம்வீரின் மனைவி கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!