நீடிக்கும் கடற்சீற்றம்: அதிகாரிகள் ஆய்வு

சென்னை: கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடல் சீற்றம் கார ணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை காணப்படும் கடல் சீற்றம் குறித்து மத்திய அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற் கொண்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் அண்மைக் காலமாக ஐம்பது மீட்டர் வரை கடல் நீர் ஊருக்குள் வருவதாக, ஆய்வு நடத்திய அதிகாரிகள் தரப்பு தெரிவிக் கிறது. மேலும், பவளப் பாறைகள் உள்ள பகுதிகளில் மட்டும் கடல் அரிப்பு அறவே இல்லை என்பதையும் அதிகாரிகள் கண்ட றிந்துள்ளனர்.

சென்னை தொடங்கி கன்னி யாகுமரி வரை மொத்தம் 12 இடங்களில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்க ளிடம், கடல் அரிப்புக்கான கார ணங்கள் குறித்து, கருத்துகள் கேட்டு அவற்றை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக சென்னையின் கடலோரப் பகுதி களில் கடல் சீற்றம் காணப்படு கிறது. பட்டினப்பாக்கம், சீனிவாச புரத்தில் கடல் சீற்றம் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து அனைத்து கட லோர மாவட்டங்களிலுமே கடல் சீற்றமும் அரிப்பும் நீடிப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தற்போது நடந்து வரும் ஆய்வின் முடிவில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனத் தெரிகிறது. ஆய்வு நடக்கும் பகுதிகளில் இருந்து கடற்கரை மணலை அதிகாரிகள் பரிசோதனைக்காக சேகரித்துள் ளனர். கடல் அரிப்புக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என் பது தொடர்பாகவும் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.