பிரதமரை ஜெயலலிதா சந்தித்தது வழக்கில் தப்பிக்கும் யோசனை பெறவே டெல்லி சென்றார்

சென்னை: அதிமுக ஆட்சியில் அரசுப் பணியில் அமர்த்துவதற்கு பலரிடம் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டி உள்ளார். தம் மீதான அவதூறு வழக்கு விசாரணையின்போது, அதிமுக அரசின் இந்த ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக அவர் தெரி வித்தார். நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தாம் குறிப்பிடும் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தம்மி டம் இருப்பதாகவும் சட்டப்பேரவை யில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து தரவேண்டும் என்றும் கூறினார். "அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பணி, பேருந்து நடத்துநர் பணி போன்றவற்றுக்கு கையூட்டு பெற்றுக்கொண்ட பிறகே வேலை வழங்குகிறார்கள். இதை வெளிப் படையாக தெரிவித்ததற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தி ருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்து வேலை பெற்றவர்கள் பட்டியலை, நான் ஆதாரத்தோடு வெளியிட்டு, வழக்கு நடைபெறும் போது நிரூபிப்பேன்," என்றார் இளங் கோவன்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்த அவர், எதிர்வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்து வது தொடர்பாக கேரள மாநில முதல்வரின் கருத்தை வரவேற்பதாகக் கூறினார். அண்மையில் முதல்வர் ஜெய லலிதா டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தது தமிழக மக்களின் நலனுக்காக அல்ல என்று குறிப்பிட்ட அவர், தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பது தொடர்பில் பிரதமரின் ஆலோசனையைக் கேட்பதற்காகவே ஜெயலலிதா டெல்லி சென்ற தாகச் சாடினார். "மத்திய அரசு குளச்சல் வர்த்தக துறைமுகத்தை, குளச்சல் பகுதியில்தான் அமைக்க வேண் டும். சிலரின் தனிப்பட்ட சொத்துகளைக் காக்க வேண்டும் என் பதற்காக வேறு இடத்தில் துறை முகத்தை அமைப்பதற்கான முயற்சி நடக்கிறது.

"உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். தமிழக காங்கிரஸ் சார்பில் நான் கலந்து கொண்டேன். தேர்தல் நிலவரம், கட்சி நிலவரம், தேர்தல் வியூகம் குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி னேன். "உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண் டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முதலில் பாஜக போட்டி யிடும் இடங்களில் வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற் கான பணிகளை அவர் தொடங்க லாம்," என்றார் இளங்கோவன். அண்மையில் ஏழு மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டது பற்றி சோனியாகாந்தியிடம் தாம் எது வும் பேசவில்லை என்று குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!