முகநூலில் தேர்தல் செலவுக் கணக்கு தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட ஆளூர் ஷா நவாஸ் தனது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் அளித்த தோடு, அதை முகநூலிலும் பதிவு செய்துள்ளார். தேர்தலில் 20 ஆயிரம் வாக்கு களைப் பெற்ற அவர், பிரசார நட வடிக்கைகளுக்காக ரூ.14.6 லட் சம் செலவானதாகக் கூறியுள்ளார்.

“தேர்தல் நிதி வேண்டி மக்க ளிடம் கோரிக்கை வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று வந்த தொகை சுமார் 16 லட்சம் ரூபாய் ஆகும். தேர்தல் ஆணை யத்திடம் தாக்கல் செய்யப்பட்ட செலவுக் கணக்கு ரூ.14,66,555 ஆகும். இந்த செலவுகள் தேர்தல் ஆணையம் வரையறுத்த நாட்க ளுக்குள் செலவு செய்யப்பட்டவை மட்டுமே. அதற்கு முன்னரும் பின்னருமான செலவுகள், எஞ்சிய தொகையிலிருந்து செய்யப்பட் டுள்ளன,” என்று ஷா நவாஸ் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்காக நண்பர்களிடம் ரூ.2 லட்சம் கடனாகப் பெற்றதாக வும் அத்தொகை திருப்பி அளிக் கப்பட்டுள்ளது என்றும் தெரிவித் துள்ள அவர், வாக்களிக்க பணம் கொடுப்பது போன்ற எவ்வித முறைகேட்டிலும் தாம் ஈடுபட வில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.