பழ.கருப்பையா: மனதளவில் திமுகவில்தான் உள்ளேன்

சென்னை: மனதளவில் தாம் எப் போதோ திமுகவில் இணைந்துவிட் டதாக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா கூறினார். கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு வெளியேறிய அவர், திமுகவில் இணையுமாறு தமக்கு அக்கட்சித் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்ததைப் பெரும் பாக்கியம் எனக் கருதுவதாகத் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய கருப்பையா, உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக் காக பிரசாரம் செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"கருணாநிதியைச் சந்திக்க வைக்க மு.க.ஸ்டாலின் பலமுறை ஏற்பாடு செய்தார். ஆனால் அது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது தலைவரே என்னை அழைத்துள்ளார். இதை விட எனக்கு வேறென்ன பெருமை வேண்டும்? "மு.க.ஸ்டாலின் நான்காம் தலைமுறை திராவிடத் தலைவ ராகச் செயல்பட்டு வருகிறார். திமுக தலைவருக்கு சட்டப்பேரவை யில் இருக்கை வழங்காமல் உள்ள னர். அவரது குரல் பேரவையில் ஒலிக்க வேண்டும். அவருக்கு இருக்கை அமைத்துத் தராமல் அதிமுக அஞ்சுவது ஏன் என்பது தான் தெரியவில்லை," என்றார் பழ.கருப்பையா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!