தமிழகக்கோ வில்களில் ரூ.1 லட்சம் கோடி நகைகள்

சென்னை: தமிழக கோவில்களில் இருந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் களவு போயிருப்பதாக புதிய பரபரப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக 'விகடன்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கோவில்களில் உள்ள சாமி நகைகளை உடனடி யாக கணக்கெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் ஏராளமான நகைகள் மாயமாகிவிட்டதாகக் கவலை தெரிவித்துள்ளனர் என் றும் அச்செய்தி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆயிரக்கணக் கான கோவில்கள் உள்ளன. இவற்றுள் 36,488 கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக் கோவில்களுக்கு மட்டும் பல்லா யிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பல் வேறு தரப்பினரும் கோவில்களுக் காக அளித்த நகைகளில் பெரும் பாலானவற்றைக் காணவில்லை என்றும் நகைகள் களவு போனதில் கோவில் நிர்வாகிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சமபங்கு இருக்கிறது என்றும் ராமேசுவரம் கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாக விகடன் செய்தி தெரிவிக்கிறது. "ராமேசுவரம் கோவிலுக்குச் சொந்தமான 138 நகைகள் காணாமல் போய்விட்டன. குறிப்பாக பர்வதவர்த்தினி அம்மனுக்கு சாத்தப்பட்ட 13 வைர நகைகள் எங்கே போயின என்றே தெரிய வில்லை. இதுதவிர, தமிழகத்தின் உள்ள புகழ்பெற்ற தலங்களில் உள்ள தங்க, வைர நகைகள் திருடு போயுள்ளன.

இந்த நகை களுக்குப் பதிலாக போலியான நகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது இந்து அறநிலையத் துறை அதிகாரிகளே தணிக்கை செய்வதால் உண்மை வெளியில் வருவதில்லை. "கடந்த 1970ஆம் ஆண்டின் ஆவணப்படி ராமேசுவரத்தில் களவுபோன தங்க, வைர நகை களின் அன்றைய சந்தை மதிப்பே 15 கோடி ரூபாய் என்கின்றனர். இவற்றின் இன்றைய மதிப்பு அள விட முடியாதது," என்று அந்நிர் வாகி மேலும் கூறியதாக இணைய தளச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 4 டன் தங்கம் இருந்த தாகவும் அதில் பெரும்பாலான நகைகள் களவு போய்விட்டதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார். எனவே கோவில்களின் அனைத்து சொத்துகளையும் தணிக்கை செய்தாலே மொத்த ஊழலும் அம்பலமாகும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!