ஜனநாயகத்தை சீர்குலைத்த திமுக, அதிமுக: முத்தரசன் குற்றச்சாட்டு

கோவை: சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜனநாயகத்தை சீர்குலைத்ததற்காக அதிமுகவும் திமுகவும் தலைகுனிய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்ததற்காக அவ்விரு கட்சிகளும் பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை என்றும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததால்தான் இரு கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார். “தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இடதுசாரிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது தாற்காலிகமானதுதான். அதற்கு பதிலாக மக்கள் மன்றத்தில் நின்று நாங்கள் போராடுவோம்,” என்றார் முத்தரசன்.