கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, அதிமுக மோதல் ஒரு மோசடி - திருமா

சென்னை: கச்சத்தீவு விவகாரத் தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே துணிச்சல் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் செயல்பாடு கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் சென்னையில் செய்தியாளிர்களிடம் பேசியபோது அவர் கூறினார். கச்சத்தீவு விஷயத்தில், திமுக வும் அதிமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வில்லை என்று குறிப்பிட்ட அவர், மாறாக இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வது மோசடியான செயல் என்று சாடினார்.

"திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவர் கச்சத்தீவை தாரை வார்த்தார் என்று தற்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். கச்சத் தீவை இலங்கைக்கு அளித்த போது முதல்வராக இருந்த கருணாநிதி, அதற்காக பெரியள வில் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு மாநில முதல்வருக்கு நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட் டுக்கு அளிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது," என்றார் திருமாவளவன். அப்போதைய இந்தியப் பிரத மர் இந்திரா காந்தி, தமிழக முதல்வரின் அனுமதி இன்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கா மலும்தான் கச்சத்தீவை இலங் கைக்கு கொடுத்ததாகச் சுட்டிக் காட்டிய அவர், திமுகவை ஆதரிப் பதற்காக தாம் இத்தகைய கருத்தைச் சொல்லவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

"கச்சத்தீவு பிரச்சினையில் திமுகவை அதிமுக குறை சொல்கிறது. அதிமுக இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று திமுக குற்றஞ் சாட்டுகிறது. இரு செயல்களுமே மிகப்பெரிய மோசடியாகும். "ஏனென்றால், இவர்கள் ஒரு வரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதற்குப் பதிலாக, மத்திய அரசிடம் இணைந்து வலியுறுத்தி இருக்க வேண்டும். அதற்கான துணிச்சல் இல்லாததை திமுக, அதிமுகவின் செயல்கள் காட்டு கின்றன," என்றார் திருமாவ ளவன். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் திமுக, அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது குறிப் பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!