53 மணி நேரம் யோகா: சாதனை முயற்சி

சென்னை: உலக சாதனைக்காக தொடர்ந்து 53 மணி நேரம் யோகாசன பயிற்சி மேற்கொண்ட பெண் வழக்கறிஞருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித் துள்ளனர். ரஞ்சனா என்ற அப்பெண் சென்னைப் பல்கலைக்கழக யோகா பயிற்சித்துறையின் ஆதர வுடன் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார். திங்கட்கிழமை காலை ஒன்பது மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் தனது தொடர் யோகா பயிற்சியைத் தொடங்கிய அவரை ஊக்கப் படுத்தும் விதமாக கூடியிருந்தோர் உற்சாகக் குரலெழுப்பி ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக செய்தியாளர்களி டம் பேசிய அவர், அனைத்துலக யோகா தினத்தையொட்டி யோகா சனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இம்முயற்சி என்றார்.

“53 மணி நேரம் தொடர்ந்து யோகா பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து கின்னஸ் புத்தகத் தில் இடம்பெறுவதே எனது லட் சியம். அறுநூறுக்கும் மேற்பட்ட யோகாசனங்களை சுழற்சி முறையில் 53 மணி நேரம் செய்யப் போகிறேன்,” என்றார் ரஞ்சனா. இதற்கு முன்னர் நேப்பாளத் தைச் சேர்ந்த ஒரு பெண் 50 மணி நேரம் 15 நிமிடம் தொடர் யோகா பயிற்சி செய்ததுதான் உலக சாத னையாக உள்ளது.படம்: சதீஷ்