உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட விஜயகாந்த் ஒப்புதல்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியையடுத்து, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடந்த பத்து நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். அப் போது தேர்தல் கூட்டணி தொடர்பில் விஜயகாந்த் தவறான முடி வெடுத்துவிட்டதாக பல நிர்வாகி கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தனர் என்று செய்தி வெளியானது. எனினும் பெரும்பாலானவர்கள் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை முறித்துக்கொள்ள வேண் டும் என்று கூறியதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் காணும் முடிவுக்கு விஜயகாந்த் வந்திருப்பதாகத் தெரிகிறது.

"நிர்வாகிகளின் விருப்பப்படியே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம். அதற்காக நிர்வாகிகளும் தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும்," என்று ஆலோசனையின் முடிவில் விஜயகாந்த் கூறியதாகவும் இதனால் நிர்வாகிகள் உற்சாக மடைந்துள்ளனர் என்றும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மக் கள் நலக் கூட்டணியில் தேமுதிக நீடிக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வலியுறுத்தி உள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சி கள் இரண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தமது தனிப் பட்ட விருப்பம் என்றார். "தேமுதிக தலைவர் விஜய காந்த் மக்கள் நலக் கூட்டணியில் தொடர வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் இக்கட்சிகள் ஒற்று மையுடன் போட்டியிடவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காகத் தொடர்ந்து போராடும்," என்றார் நல்லக்கண்ணு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!