சவூதி, ஓமனில் தவிக்கும் 14 பெண்கள்

மதுரை: பணிப்பெண் வேலைக்காக ஓமன் நாட்டிற்குச் சென்ற 13 பெண்கள் அங்கு பல்வேறு சித்ர வதைகளுக்கு ஆளாகியுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரி விக்கின்றனர். 13 பேரையும் மீட்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த 30 வய தான மேகலாவின் கணவர் இதய நோயால் அவதிப்படுகிறார். அவ ரது சிகிச்சைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்பட்டதை அடுத்து, வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக இடைத்தரகர் மூலம் ஓமன் சென்றார். கடந்த ஏப்ரல் மாதம் மேகலா உள்ளிட்ட 13 பெண்களை பணிப் பெண் வேலைக்காக கும்ப கோணத்தைச் சேர்ந்த அப்துல்லா என்ற முகவர் ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்னர் மேகலா தன் குடும்பத்தாருடன் நான்கு முறை மட்டுமே கைபேசியில் பேசியுள்ளார். அப்போது தம்மைக் கட்டிவைத்து சித்ரவதை செய்வதாக கண்ணீ ருடன் கூறியுள்ளார். இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதிக்குப் பிறகு மேகலாவின் நிலை குறித்து எந்தவிதத் தகவ லும் இல்லை. அவருடன் ஓமன் சென்ற மற்ற பெண்களும் அங்கு சித்ர வதைக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 13 பெண்களையும் மீட்கக் கோரி, அவர்களது குடும்பத்தார் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் மனு அளித்துள்ளனர். இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வய தான பல்கீஸ் பீவி என்ற பெண் ணும் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் சென்று பல்வேறு கொடுமைகளை அனுப வித்து வருவதாகவும் அவரை மீட்க வேண்டும் என்றும் அவரது தாயார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!