குத்து ரம்யாவுக்கு அமைச்சர் பதவி தர ராகுல் உத்தரவு

பெங்களூரு: ஒக்கலிகா சமூகத் தைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் எம்பியுமான குத்து ரம்யாவை அமைச்சராக்க கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பரிந்துரைத்துள்ளது அக்கட்சியில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. கர்நாடகா காங்கிரசில் அம்பரீ ‌ஷுக்கும் குத்து ரம்யாவுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தாம் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதற்கு அம்பரீ‌ஷின் உள்ளடி வேலைதான் காரணம் என குறை கூறினார் ரம்யா.

இந்நிலையில், இப்போது ரம்யா அமைச்சராக்கப்படலாம் என்று கூறப்படுவதால் தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு ரம்யாதான் காரணம் என்கிறது அம்பரீஷ் தரப்பு. இப்போது எம்எல்ஏவாக ரம்யா இல்லாவிட்டாலும் கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினராக்கி (எம்எல் சி) அமைச்சரவையில் சேர்க்குமாறு ராகுல் கூறியுள்ளாராம். இதன் மூலம் ஒக்கலிகா சமூகத்தினரை சமாதானப்படுத்தி விடமுடியும் எனக் கருதுகிறாராம் ராகுல். கர்நாடகாவில் அதிரடியாக அமைச்சரவை மாற்றி அமைக்கப் பட்டுள்ளதால் வன்முறை வெடித்து அமளி துமளி நீடிக்கிறது. கர்நாடகத்தில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள் வதற்கான முயற்சிகளில் இறங்கி யதைத் தொடர்ந்து, சரியாகச் செயல்படாதவர்கள், சர்ச்சைகளில் சிக்கியோர், ஊழல் புகார்களில் சேர்க்கப்பட்டவர்கள் என 14 அமைச்சர்களை அதிரடியாக நீக்க உத்தரவிட்டது. அவர்களுக்குப் பதில் புதிதாக 13 பேர் அமைச் சரவையில் சேர்க்கப்பட்டனர். அடுத்த சட்டசபை தேர்தலைக் கருத்தில்கொண்டே காங்கிரஸ் மேலிடம் இந்த அமைச்சரவை மாற் றத்துக்கு அனுமதி அளித்தது.

பதவி இழந்தவர்களில் சபா நாயகர் திம்மப்பாவும் நடிகர் அம்பரீ‌ஷும் முக்கியமானவர்கள். நடிகர் அம்பரீஷ் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், குழம்பிய குட் டையில் மீன்பிடிக்கும் வகையில் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த அம்பரீஷை வளைக்க பாஜக திட்ட மிட்டுள்ளது. கர்நாடகாவில் ஒக்கலிகா சமூகத்தினர் காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்குத் தான் பொதுவாக ஆதரவு தெரி வித்து வருகின்றனர். மற்றொரு பெரும்பான்மை சமூக மான லிங்காயத்துகள், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்நிலையில், அம்பரீஷை வளைத்துப் போட்டால் ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளைக் கணிச மாகக் கைப்பற்றலாம் என்பது பாஜகவின் வியூகம். இந்த வியூகத்தை உடைக்கும் வகையில் ராகுல், அதே ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் எம்பியுமான குத்து ரம்யாவை அமைச்சராக்க சித்த ராமையாவுக்கு பரிந்துரைத்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்