சென்னை: தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி சட்ட மன்றத்தில் இருந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் நேற்று வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி பணம் சிக்கியது தொடர்பாகவும் கரூரில் அன்புநாதன் வீட்டில் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாகவும் திமுக சார்பில் பேச திட்டமிடப்பட்டது.
ஆனால், திமுக உறுப்பினர்கள் எந்தப் பிரச்சினை தொடர்பாகப் பேசினாலும் அதிமுக அமைச்சர்களோ அல்லது எம்எல்ஏக்களோ குறுக்கீடு செய்கின்றனர். எங்களை வெளியேற்றுவதையே நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறார்கள். இதனைக் கண்டித்தே இன்று திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்," என்று தெரிவித்தார்.