24 வயது இளையருக்கு தவறான காலில் அறுவை சிகிச்சை

புதுடெல்லி: தனியார் மருத்துவ மனை ஒன்றின் மருத்துவர்கள் 24 வயது இளையரின் காயம்பட்ட காலில் அறுவை சிகிச்சை செய் வதற்கு பதில் தவறான காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்தக் கவனக்குறைவு தொடர் பாக விசாரணையை மேற்கொண் டுள்ளது புதுடெல்லி மருத்துவ மையம். டெல்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ராய். இவர் கடந்த ஞாயிறன்று மாடிப்படியில் இருந்து கீழே விழ அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக போர்ட்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

"சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுத் துப் பார்த்த டாக்டர்கள், ரவிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் அது மிகவும் மோசமாக உள்ளது என்றும் கூறினர். "எலும்பு முறிவு பாதிப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் டாக்டர் கள் கூறினர். "அவர்கள் கூறுவதை நம்பிய நாங்கள் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டோம். "பின்னர், எங்களது மகனுக்கு நினைவு திரும்பியதும்தான் வலது காலுக்குப் பதில் மிகவும் நல்ல நிலையில் இருந்த அவனது இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உண்மை நிலையை அறிந்தோம்," என்று ரவி ராயின் தந்தை ராம்கரண் ராய் கூறினார். நாங்கள் இதுகுறித்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டதும், "இது ஒரு பிரச் சினையே அல்ல. இடது காலில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்து, அதில் போடப்பட்டுள்ள இரும்பிலான இணைப்புத் திரு காணியை எடுத்து வலது காலில் பொருத்திவிட்டால் எல்லாம் சரி யாகிவிடும்," என்று மருத்துவனை அதிகாரிகள் பொறுப்பற்ற விதத் தில், அலட்சியமாகக் கூறியதை நினைத்தால் அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது என்று ராம்கரண் ராய் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!