கலப்புத் திருமணம்: எட்டு ஆண்டுகளுக்குப் பின் மருமகளைக் கொன்ற தம்பதி கைது

சென்னை: வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் பெற்ற மகன் மீது ஆத்திரமாக இருந்த பெற்றோர், 8 ஆண்டுகளுக்குப் பின் மருமகளைப் படுகொலை செய்துள்ளனர். இதையடுத்து இருவரையும் நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர். திருச்செங்கோடைச் சேர்ந்த வர் சந்தோஷ். இவருக்கும் வேலூரைச் சேர்ந்த சுமதிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இத னால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலியை கடந்த 2008ஆம் ஆண்டு மணம் புரிந்தார். பின்னர் இருவரும் கோவை யில் வசித்து வந்தனர். இந்நிலை யில் கடந்த 2012ஆம் ஆண்டு இத்திருமணத்தை சுமதியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். அதனால் அவர்களது சம்மதத்து டன், வேலூரில் மட்டும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

நாமக்கல்லில் தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார் சந்தோஷ். இந்நிலையில் 3 வாரங்களுக்கு முன்பு அவருக்கு கிளை மேலா ளராக பதவி உயர்வு கிடைத்தது. அதன் பேரில் ஓசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில் அவரது பெற்றோரும் திரும ணத்தை ஏற்றுக் கொள்வதாக வும், மீண்டும் ஒருமுறை திருமண வரவேற்பு நிகழ்வை தங்களுக்காக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். வேறு வழியின்றி சந்தோஷ் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அவரது தாயார் மாதேஸ் வரி, மருமகள் சுமதியைப் பார்க்க வந்துள்ளார். ஆனால் அவர் வந்து சென்ற பின்னர் சுமதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

இதையடுத்து சந்தோ‌ஷின் பெற்றோர் மீது சந்தேகம் கொண்ட போலிசார் இருவரி டமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் மருமகள் சுமதியை கழுத்து அறுத்து கொலை செய்ததை மாமனார் பழனிவேல் ஒப்புக் கொண்டார். அவர் மனைவி மாதேஸ்வரி மருமகளைக் கொலை செய்ய உதவி செய்துள்ளார். கலப்பு மணம் புரிந்த மகன் மீதான ஆத்திரமும் மருமக ளுக்கு 8 ஆண்டுகளாக குழந்தை பிறக்காததுமே கொலை செய்ய காரணம் என இருவரும் வாக்குமூலம் அளித் துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!