ரயிலில் ஹரித்துவார் சென்ற திருவள்ளுவர் சிலை

சென்னை: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 அடி உயர திரு வள்ளுவர் சிலை வரும் 29ஆம் தேதி நிறுவப்பட உள்ளது. திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்ட பாஜக மாநிலங் களவை உறுப்பினரான தருண் விஜய் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள் ளார். திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் உரு வாக்கப்பட்டு பின்னர் சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலை யில் அதை ரயிலில் ஹரித்துவார் கொண்டு சென்றுள்ளார் தருண் விஜய். சிலை வழியனுப்பு நிகழ்வு நேற்று முன்தினம் சென்னையில் நடை பெற்றது. இதில் ஆளுநர் ரோசய்யா கொடியசைத்து, சிலையை வழியனுப்பி வைத்தார்.

பின்னர் ஆளுநர் கே.ரோசய்யா பேசுகை யில், திருக்குறள் ஒரு பொக்கிஷம் என்றார். “திருக்குறள் காலத் தால் நிலைத்து நிற்கக் கூடியது. உலகிற்கு பொதுவானது. எல்லா நேரத்துக்கும் பொருந்தக் கூடியது,” என்றார் ஆளு நர் ரோசய்யா. பாஜக எம்பி தருண் விஜய் பேசுகையில், சாதி, மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து திருக்குறள் பொது மறையாகத் திகழ்கிறது என்றார். “திருவள்ளு வர் இந்தியாவின் அடை யாளம். அவர் அனைவ ருக்கும் பொதுவானவர்,” என்றார் தருண் விஜய். படம்: சதீஷ்