ஓடுபாதையில் பழுதாகி நின்ற விமானம்; தரையிறங்க வந்த மற்றொரு விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை: ஓடுபாதையில் ஏற் கெனவே ஒரு விமானம் பழு தாகி நின்ற நிலையில் மற் றொரு விமானம் அதே ஓடு பாதையில் தரையிறங்க வந்த தால் சென்னை விமான நிலை யத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தரையிறங்க வந்த விமானியின் சாதுரியமான செயல்பாடு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகலில் கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதை யில் தரையிறங்கியபோது அதன் சக்கரங்கள் திடீரென செயலிழந்தன. இதனால் விமானத்தின் கீழ்ப்பகுதி ஓடுபாதையை உரசியது. பெரும் சத்தத்துடன் சென்ற விமானத்தை அதன் விமானி மிக சாதுரியமாகச் செயல்பட்டு, விபத்து ஏதும் நேர்ந்துவிடாமல் ஓடுபாதையிலேயே நிறுத்தினார். இதனால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நிலையில் மற் றொரு ஆபத்து நெருங்கியது.

இந்த விமானம் ஓடுபாதையில் நிற்பதை அறியாத மற் றொரு ஏர் இந்தியா விமானமும் அதே ஓடுபாதையில் தரையிறங்க முற்பட்டது. இரண்டாவது விமானத்தின் விமானி, கடைசி தருணத்தில் ஓடுபாதையில் ஏற்கெனவே ஒரு விமானம் நிற்பதை அறிந்தார். இதையடுத்து, துரித கதியில் செயல்பட்ட அவர், விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் மேலெழுந்து பறக்கச் செய்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓடுபாதையில் நின்ற விமானத்தால் பல விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஓடுபாதை சரி செய்யப்பட்ட பின், விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையே இந்தோனீ சியாவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தில் பயணம் மேற்கொண்ட தொழில் அதிபர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது

இந்தோனீசியாவைச் சேர்ந்த அவாத்‌ஷீ பான் என்ற 55 வயதான அத்தொழிலதிபருக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க விமானிகள் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். இதைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப் பட்டது. அதன் பின்னர் பய ணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவங்களால் நேற்று முன்தினம் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!