லெஸ்டரில் நீடிக்கிறார் வார்டி

லெஸ்டர்: முந்தைய பருவத்தில் லீக்கில் தனது இடத்தைத் தக்க வைக்கவே தடுமாறிய குழு ஒன்று, அடுத்த பருவத்தில் சீறிப் பாய்ந்து பட்டத்தையே தன்வச மாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியது நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. அக்குழுவின் இந்த அபார எழுச்சிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் இங்கிலாந்து தாக் குதல் ஆட்டக்காரர் ஜேமி வார்டி, 29. தொடர்ந்து 11 ஆட்டங்களில் கோலடித்து புதிய சாதனை படைத்த இவர் 2015-16 இபிஎல் பருவத்தில் மொத்தம் 24 கோல் களைப் புகுத்தினார்.

கடந்த இபிஎல் பருவத்தின் சிறந்த வீரர் விருது வென்ற இவரைக் கொத்திச் செல்ல ஆர்சனல் குழு முயன்று வந்தது. இந்நிலையில் லெஸ்டர் சிட்டி குழுவிலேயே நீடிக்கும் வகையில் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தமது நிலையைத் தெளிவுபடுத்தி இருக்கிறார் வார்டி.

லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவுடன் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஜேமி வார்டி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!