கறுப்புப் பண சொத்துப் பட்டியல்

புதுடெல்லி: கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் சொத்துப் பட்டியலை வருமான வரித்துறை நேற்று அதிரடியாக வெளியிட்டது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத் துள்ள இந்தியர்களின் பட்டியலை வருமான வரித்துறை அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது அவர்களின் சொத்துப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அப்பட்டியல் வருமான வரித் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கறுப்புப் பணம் பதுக்கி வரி ஏய்ப்பு செய்தவர்களின் பெயர் கள், அவர்களது முகவரிகள் மற்றும் அசையா சொத்துகள், நகைகள், எந்திரங்கள், பங்குகள், வைப்புத் தொகைகள், பங்குகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. 'வருமான அறிவிப்புத் திட்டம் 2016' என்ற தலைப்பில் அந்த இணையத் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

கறுப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு நாடு முழுவதும் சொத்து கள் உள்ளன. அவற்றின் விவரம் சேகரிக்கப்பட்டு சொத்து மதிப்புச் சான்றிதழ் பெறப்பட்டது. அதை வைத்து சொத்து மதிப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் விரைவில் நாடு முழுவதும் உள்ள வருமான வரித் துறை மண்டல அலுவலகங் களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக் கப்பட உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!